தூத்துக்குடி அருகே நடுரோட்டில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை…
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை கூட்டாம்பள்ளி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் வெள்ளகண்ணு இவர் சாலையில் நடந்து சென்ற போது, அவ்வழியாக வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வெள்ளைக்கண்ணு வை நடுரோட்டில் ஓட ஓட சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளனர். புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளை கண்ணு சில மாதங்களுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார், ஏற்கனவே கொலை செய்யப்பட்ட வழக்கில் பழிக்கு பலியாக நடந்த கொலையா? என புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.