தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர்பால் தலைமையிலான காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல் தீவிர விசாரணை!


தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதிலிருந்து லஞ்ச ஊழல் இல்லாத ஆட்சி நடைபெறும் என தொடர்ந்து தமிழக முதல்வர் தெரிவித்து வருகிறார் மேலும் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் தமிழகத்தில் லஞ்ச ஊழல் இல்லாத ஆட்சி சிறப்பாக நடக்க வேண்டும் லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.


இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்றதிலிருந்து அதிக அளவு பணம் புழங்கும் பத்திரப்பதிவு அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி துறை அலுவலகங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தி பல லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 


இதைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையிலான எட்டு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று மாலை 5 மணி அளவில் திடீர் சோதனை மேற்கொண்டனர் 


தாலுகா அலுவலகத்தில் அமைந்துள்ள பல்வேறு பிரிவுகளில் அவர்கள் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர் இதில் தாலுகா அலுவலகத்தில் அமைந்துள்ள குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத ரூபாய் 22,900 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பணம் பிடிப்பட்டது தொடர்பாக அதிகாரிகளிடம் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.