விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது, பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் பால்,தயிர்,சந்தனம்,பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்திபகவானுக்கு பஞ்சமுக மகாதீபாதாரணை நடைபெற்றது, இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிவநாமம் பாடியபடி மனம் உருகி தரிசனம் செய்தனர்.