விளாத்திகுளம் அருகே மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்: சீறிப்பாய்ந்த 38 ஜோடி மாடுகள்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெத்தநாச்சி அம்மன்,ஸ்ரீ முனியசாமி திருக்கோவில் ஆனி மாத கொடை விழாவை முன்னிட்டு, சூரங்குடி தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் சார்பில்   மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது.



சின்னமாடு,பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில்  ராமநாதபுரம்,விருதுநகர்,சிவகங்கை,திருநெல்வேலி,தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 38 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன, போட்டியானது சூரங்குடி to விளாத்திகுளம் சாலையில் நடைபெற்றது, போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.




இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நடைபெற்ற மாட்டு வண்டியில் எல்கை பந்தயத்தினை சாலையின் இரு புறமும் நீண்ட தூரத்திற்கு பொதுமக்கள் மற்றும் பந்தய ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

நடைபெற்ற இந்த மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயத்தினை  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன், விளாத்திகுளம் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவரும், அதிமுக விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளருமான ராமச்சந்திரன், விளாத்திகுளம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி செந்தூர்பாண்டி ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பிரமணியன் கிளை செயலாளர்கள் சந்திரசேகர், சடையாண்டி,சுந்தர், சரவணன் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரதிதாசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.