விளாத்திகுளத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது!
வருகின்ற ஆகஸ்ட் 17-ம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ள எழுச்சித்தமிழர் பிறந்தநாள், தமிழ் தேசிய எழுச்சி மாநாடு கூட்டத்திற்கான, மாவட்ட செயற்குழு கூட்டம் விளாத்திகுளம் வேம்பார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆ. சடையாண்டி தலைமையில் , சிறப்பு அழைப்பாளராக மண்டல செயலாளர் ராஜகுமார் நடைபெற உள்ள தமிழ் தேசிய இன எழுச்சி மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டச்துணைசெயலாளர்.சண்முகராஜ்,சுந்தர்.கோட்டைச்செல்வி.முகாம்பியா.குழந்தை எசு.தினேஷ்வளவன்.அசோகன்.மேட்சம்.விஜயன்.கதிரேசன்.இளையாரஜா.முருகச்செல்வம்.தினேஷ்.ராஜவேல்.சந்தரசேகர்.ஆனந்த்.ராஜ்சேகர்.மற்றும் பலர் கலந்துகொண்டனர்.