விளாத்திகுளம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 1380 கிலோ பீடிஇலைகள் : பறிமுதல் 3 பேர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தெற்கு கல்மேடு பேருந்து நிறுத்தம் அருகே தருவவைகுளம் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை செய்தனர், அப்போது வேனின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார்,போலீசார் வாகனத்தை திறந்து பார்த்தபோது, வாகனத்தில் 46 மூட்டைகளில் சுமார் 1380 கிலோ பீடிஇலைகள் இருந்து தெரிய வந்தது, இதனை அடுத்து தருவவைகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் சேர்ந்த முகமது அப்துல்லா என்பவர் மகன் நாகூர் கனி (31), வேல்முருகன் என்பவரின் மகன் மாரிச்செல்வம் (29), கர்னலிஸ் என்பவரின் மகன்பிரசாத் (44) ஆகிய மூன்று பேரும் பீடிஇலைகளை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முடிந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பீடிஇலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்த தருவவைகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.