தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி  திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு   X தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து!


யார் இந்த கி.வீரமணி ?  

பிறப்பு: 02 டிசம்பர் 1933) திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக முழு நேரமும் கட்சிப் பொறுப்பை கவனிக்கும் விதத்தில் பெரியாரால் 1962 இல் நியமிக்கப்பட்டவர்.

பெரியாரின் மறைவுக்குப்பின்பும், மணியம்மையாரின் மறைவுக்குப்பின்பும் தொடர்ந்து இயக்கத்தை நடத்தி வருகிறார். 2003 ஆம் ஆண்டு முதல் திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுச் செயல்படுகிறார்.

ஆங்கிலத்தில் (The Modern Rationalist) மாத இதழ், தமிழில் விடுதலை (நாளேடு), உண்மை (மாதமிருமுறை ஏடு), பெரியார் பிஞ்சு (குழந்தைகளுக்கான மாத ஏடு) ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்து வருகிறார். பெரியார் அறக்கட்டளை மூலம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். 

தமிழகத்தையும் தாண்டி வெளிநாடுகளிலும் பெரியாரின் கொள்கைகளை பரப்பி வருகிறார்.

இந்நிலையில் திராவிட கழகத்தலைவர் கி. வீரமணியன் 92 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட  தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சுயமரியாதை - பகுத்தறிவு - சமூகநீதி எனும் தந்தை பெரியாரின் கொள்கை சுடரேந்தி, திராவிட இயக்கங்களின் மூத்த வழிகாட்டியாய் இயங்கி வரும் மரியாதைக்குரிய ஆசிரியர் @AsiriyarKV அவர்களுக்கு அன்பிற்கினிய பிறந்தநாள் வாழ்த்துகள்.


அவர் நல்ல உடல்நலம் பெற்று, நீண்ட காலம் தனது சமத்துவ பயணத்தைத் தொடர விழைகிறேன் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.