ஓட்டப்பிடாரம் அருகே சாலையில் திடீரென தீப்பிடித்து எறிந்த லோடு வேன்!


தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி (28) இவரோடு வென்ற டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில்  புதியம்புத்தூர்  பகுதியில் லோடு ஏற்றுவதற்காக முனியசாமி சென்று கொண்டிருந்தபோது திடீரென வேனின் முன்பக்கத்தில் புகை வந்ததை அடுத்து முனியசாமி வேனை விட்டு இறங்கி ஓடிள்ளார். இதனை அடுத்து சிறிது நொடியில் வேன் முழுவதும் மல மலவேன தீப்பிடித்து எரிந்ததில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான லோடு வேன் நாசமானது.

தகவல் அறிந்து வந்த ஓட்டப்பிடாரம் தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் அதற்கு முன் லோடுவேன் முற்றிலும் இருந்து சாம்பலானது. இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.