தூத்துக்குடியில் பெண் போலீசுக்கு வெட்அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த இரு இளைஞர்கள் கைது!
தூத்துக்குடி- முத்தையாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராஜகீதா என்ற உதவி ஆய்வாளருக்கு, அப்பகுதியை சேர்ந்த பிச்சையாக மகன் அஜித்குமார் (29),சந்திரன் மகன் மகாராஜா ஆகியோர் இருவரும் வெட்அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனை அடுத்து உதவி ஆய்வாளர் ராஜகீதா அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் அஜித்குமார் மற்றும் மகாராஜா இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த வெட்அரிவாலை பறிமுதல் செய்தனர். காவல்துறையினரை அரிவாலை காட்டி இரு இளைஞர்கள் மிரட்டிய சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.