தூத்துக்குடியில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை.


தூத்துக்குடி கால்டுவெல் காலனி பகுதியை சேர்ந்தவர் வடிவேல் என்பவரின் மனைவி ஜெமிலா(40), ஜெமிலாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வடிவேலை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்தாக கூறப்படுகிறது, இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்தால் ஜெமிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.