ஸ்ரீவைகுண்டம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 5000 அபராதம்.


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், குரும்பூர் புதுகிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகன் கருப்பசாமி (31), என்ற குற்றவாளிக்கு,வழக்கு விசாரணையில் தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கருப்பசாமிக்கு 5 வருடங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 5000 அபதாரம் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார். 


இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானப்பிரகாசி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி அவர்களையும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல்நிலை காவலர் முருகலெட்சுமி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.