குலசேகரப்பட்டினம் அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை ? : போலீசார் தீவிர விசாரணை.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகே உள்ள செட்டியாபத்து கிராமத்தை சேர்ந்த கருப்பன் என்பவரின் மகன் உமையன் (55), இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற உமையன் ஊரின் அருகே உள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தொங்கியபடி உயிரிழந்த கிடந்துள்ளார். இதனை அடுத்து உமையன் உடலை மீட்ட குலசேகரப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உமையன் உண்மையிலேயே தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எனும் காரணம் உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.