கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வானுபன்விளை பகுதியில் சட்ட விரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 நபர்கள் கைது - 4 கிலோ 435 கிராம் கஞ்சா பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வெங்கடாசலம் வழக்கு பதிவு செய்து சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி, சுனாமி காலனி பகுதியைச்சேர்ந்த ஆறுமுகம் மகன் மாணிக்கம் (36), அவரது மனைவி சுமதி (33) மற்றும் வானுபன்விளை பகுதியைச்சேர்ந்த கேசவன் மகன் தனுஷ்கோடி (37) ஆகிய 3 நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 4 கிலோ 435 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தார்.