அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!



தமிழகம் முன்னாள் முதல்வர் பாரத ரத்னா புரட்சித்தலைவர் MGR-ஆல் தொடங்கப்பட்டு தொடர்ந்து மக்கள் பணியாற்றி வரும்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55- ஆவது ஆண்டு விழா,தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிளை,வார்டு, பேரூர் ஒன்றிய கழகம்,வார்டு மற்றும் வட்டளவில் அதிமுக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் 55-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு உள்ள முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் மார்பளவு திருவுருவ சிலைக்கும், அதேபோல் காய்கறி மார்க்கெட்டில் உள்ள எம்ஜிஆரின் திருஉருவ சிலைக்கும் விளாத்திகுளம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் தலைமையிலும், விளாத்திகுளம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் மத்திய ஒன்றிய செயலாளர் பால்ராஜ் ஏற்பாட்டிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது, இந்நிகழ்வில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆனந்த்,விளாத்திகுளம் பேரூர் நகரசெயலாளர் மாரிமுத்து, அதிமுக நிர்வாகி கண்ணன்,சண்முகசாமி, மகளிர் அணி சாந்தி உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.