விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் அருள்மிகு ஸ்ரீ காந்தாரி அம்மன் கோவில் புரட்டாசி மாத கோவில் திருவிழாவை முன்னிட்டு 100-க்கு மேற்பட்ட பக்தர்களின் பால்குட ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காந்தாரியம்மன் கோவில் புரட்டாசி மாத கோவில் திருவிழாவானது, நேற்று மாலை குத்து விளக்கு பூஜையுடன் தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து இன்று காலை நாகலாபுரம் சிவன் கோவிலில் 100-க்கும் மேற்பட்ட பால்குடங்களுக்கு சிறப்பு பூஜை செய்த பின், நையாண்டி மேளத்துடன் காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்களால் ஊர்வலமாக எடுத்துக்கொண்டு வரப்பட்ட பால்குடங்களால் காந்தாரி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது, அதனைத்தொடர்ந்து அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு இன்று இரவு அக்னி சட்டி ஊர்வலம் நாளை முளைப்பாரி ஊர்வலம் நாளை இரவு அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா ஊர்வலம், மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.