தூத்துக்குடி - கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி பகுதியை சேர்ந்த இன்னாசி முத்து மகன் பிரைட் (19) என்பவரை கைது செய்து அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 5 கிலோ 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.