தூத்துக்குடியில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது.
தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் சாலையில் வருபவர்களை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி பகுதியில் சேர்ந்த மலைய ராஜி(38) மற்றும் தூத்துக்குடி நெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (24) ஆகிய இருவரையும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீஸ்சார் கைது செய்தனர்.மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.