திருச்செந்தூரில் ஆடுதிருட்டில் ஈடுபட்ட 3பேர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சண்முகபுரம் பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவரின் மனைவி பேச்சித்தாய் (41), இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த ஆடுகள் காணாமல் போனது குறித்து, பேச்சிதாய் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஆடுகளை திருடிய திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினம் பகுதியை சேர்ந்த சடையன்(45), விக்கி(30), சேர்மதுரை ஆகிய 3 பேரையும் திருச்செந்தூர் போலீசார் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.