ஸ்ரீவைகுண்டம் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனுக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் ஆயுட்கால சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.



தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணையில்,குற்றவாளியான ஆழ்வார்திருநகரி பகுதி பால்ராஜ் மகன் முருகன்(36) என்பவருக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் ஆயுட்கால சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற நீதிபதி திரு. சுரேஷ் தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார் .


இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. லெட்சுமிபிரபா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட  அரசு தரப்பு வழக்கறிஞர் திருமதி. முத்துலட்சுமி அவர்களையும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் திருமதி. முருகலெட்சுமி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.