தூத்துக்குடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள திறந்தவெளி விளையாட்டு திடலை திறந்து வைத்த கனிமொழி எம்.பி!
தூத்துக்குடி, பி & டி காலனி 12வது தெருவில், ரூ. 50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள திறந்தவெளி விளையாட்டு திடல் திறப்பு விழா நடைபெற்றது. இதில், தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு திறந்தவெளி விளையாட்டு திடலை திறந்து வைத்தார். தொடர்ந்து, விளையாட்டு சாதனங்களை இளைஞர்களுக்கு கனிமொழி எம்.பி வழங்கினார்.
இந்நிகழ்வில் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.