தூத்துக்குடியில் வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு.
தூத்துக்குடி இசக்கியம்மன் கோவில் அருகே பாளை சாலையை கடக்கும் என்ற சுமார் (60) வயது மதிக்கத்தக்க முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது,இதனை அடுத்து பலத்த காயம் அடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் செல்லும் வழியிலேயே முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார், உயிரிழந்த முதியவர் யார் என்பது குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.