அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட திமுக அண்ணாமலையால் முடிவுக்கு வரப்போகிறது - எட்டையபுரத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக நிர்வாகி பேச்சு!



தூத்துக்குடி வடக்கு மாவட்டம் எட்டையபுரம் மண்டல் சார்பில் எட்டையபுரம் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு, 2025-2026 பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சரவண கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மண்டல் தலைவர் உட்பட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த 2025-2026 பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில், மத்திய பாஜக அரசு திட்டங்களில் தமிழகத்தில் நடைபெற்ற பணிகள், தற்போது நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்படவுள்ள பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள், பாஜக அரசின் சாதனைகளை பற்றி கட்சி நிர்வாகிகள் விளக்கிக் கூறினர். மேலும், இக்கூட்டத்தில் பேசிய பாஜக நிர்வாகி கந்தசாமி "அண்ணா -வால் ஆரம்பிக்கப்பட்ட திமுக இயக்கம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையார் முடிவுக்கு வரப்போகிறது என்றும், திமுக 2026-ல் மண்ணை கவ்வும், தமிழ்நாட்டில் தாமரை மலரும், ஆட்சி அமைக்கும் என்று சூளுரைத்தார். அதேபோன்று இந்த மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பாஜக நிர்வாகி ராம்கி பேசியபோது; 2026-ல் நாங்கள் மோடிஜி-யின் சாதனைகளை கூறி வாக்கு கேட்போம்... மத்திய அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களிலும் மக்களுக்கு நேரடியாக பணம் போய் சேர்கிறது என்று பாஜக அரசின் சாதனைகளை விளக்கியும், திமுக அரசை விமர்சித்தும் பேசினார். இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.