தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 8 பெண் காவலர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்!


தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் காவலர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் அவர்களின் திறமையை மேம்படுத்தும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அவர்கள் பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற ஏற்பாடு செய்யுமாறு ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.


அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்  முன்னெடுப்பின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் (ஆயுதப்படை பொறுப்பு) அவர்கள் மேற்பார்வையில் மோட்டார் வாகன பிரிவு காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டுநர் உரிமம் பெற ஆர்வமுள்ள தாலுகா காவல் நிலையம் மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த 8 பெண் காவலர்களுக்கு 35 நாட்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி அளித்தனர்.