தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீது பாய்ந்தது. குண்டர் தடுப்பு சட்டம்!



தெர்மல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 எதிரிகள் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு - இந்த ஆண்டு இதுவரை 138 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்


கடந்த 11.11.2025 அன்று தூத்துக்குடி தெர்மல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான தெர்மல் நகர் பகுதியை சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் ரீதன் (21) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சதீஷ்(24) ஆகிய 2 எதிரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர்.கே.இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (10.12.2025) தெர்மல் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்த ஆண்டு இதுவரை 138 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.