தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில் கடந்த ஐந்தாண்டுகளாக இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும், விவசாய பயிர்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டி பலமுறை கோரிக்கை வைத்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று புதூர் பேருந்து நிலையம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சரவண கிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள், ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, இப்போதியில் காட்டு பன்றிகளை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இப்போது என் காட்டுப்பண்டிகளால் சேதம் அடைந்த நிலங்களையும் விவசாய பயிர்களையும் உரிய ஆய்வு செய்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் புதூர் மண்டல் பாஜக பொதுச்செயலாளர் பழனி முருகன், பாஜக மாவட்ட துணை தலைவர் சேதுராஜ், பிரச்சார பிரிவு மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசன், மண்டல தலைவர் கிழக்கு பிரஸ்னேவ், மண்டல தலைவர் மேற்கு சிவபெருமாள், புதூர் ஒன்றிய பொதுச்செயலாளர் அழகர் பாபு, மாவட்ட விவசாயிகள் அணி பொதுச்செயலாளர் சுபி பிரேம் உட்பட கட்சியினர் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
விவசாயம்
புதூரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அரசு மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா!
அடுத்த
8 பெண் காவலர்களுக்கு ஓட்டுனர் உரிமம்!
இதையும் படிக்கலாம்
500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல்!
24 Jul 2024
எட்டையபுரத்தில் விவசாயிகளுக்கு டிராக்டர்கள் வழங்கிய கனிமொழி எம்.பி.!
09 Mar 2024
" இன்னைக்கு விழுமோ நாளைக்கு விழுமோ " என்ற நிலையில் உள்ள தடுப்பணை:பொதுப்பணித்துறை கண்மாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை!
06 Jan 2024
அதிகாரிகளை திணறடித்த விவசாயிகள்!
04 Jan 2024