தூத்துக்குடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை: மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
வருகின்ற டிசம்பர் 29 தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 29ம் தேதி தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார், அதன்பின் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து கோப்புகளை பார்வையிட்டு கேட்டறிய உள்ளார்,மற்றும் தூத்துக்குடி மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை,பின்னர் 30 ம் தேதி புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தை துவக்கி வைக்கிறார். இதனை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகைக்கான முன்னேற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.