இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் எட்டையாபுரத்தில் சாலை மறியல்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மறியல் போராட்டம் தாலுகா செயலாளர் சோலையப்பன் தலைமையில் மறியல் நடைபெற்றது. சமீபத்தில் ஒன்றிய அரசால் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்காததை கண்டித்தும் , பாரபட்சமான பட்ஜெட்டை கண்டித்தும் மாநிலங்களுக்கு சரிவிகிதமாக நிதியினை பங்கு அளிக்காததை கண்டித்தும்,பாரபட்சமான பட்ஜெட்டை கண்டித்து நடைபெற்ற மறியலை மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன் தொடங்கி வைத்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் சேது கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா துணை செயலாளர் ரவீந்திரன், நகர செயலாளர் முனியசாமி, விளாத்திகுளம் தாலுகா துணை செயலாளர் சந்திரமோகன், பிதப்புரம் ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 9 பெண்கள் உட்பட 51 பேரையும் எட்டயபுரம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.