மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவன் டாய்லெட் கிளீனர் குடித்து உயிரிழப்பு?



தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ராஜமன்னார்புரத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(41), பிரகாசுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும்,  பிரகாஷ்  வேலைக்கு செல்லாமல்  இருந்து வந்ததால் அவரது மனைவி ஜெயா தனது குழந்தைகளுடன் கணவர் பிரகாஷை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது,  இந்நிலையில் மனைவியின் பிரிவை தாங்க முடியாத பிரகாஷ் மதுவில் டாய்லெட் கிளீனர் கலந்து  குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து  பிரகாஷின் உடலை கைப்பற்றிய தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.