வக்புவாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா குழுவின் சார்பில் வக்புவாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற ஒன்றிய அரசை வலியுறுத்தியும் ‌மத சிறுபான்மையினரின் மத உரிமையை பறிக்கின்ற அரசியல் அமைப்பு சட்டத்தை மீறுகின்ற பாஜக  அரசை கண்டித்தும் தாலுகா செயலாளர் சோலையப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தாலுகா செயலாளர் ரவிந்திரன் விளாத்திகுளம் தாலுகா செயலாளர் வேலாயுதம், தலைவர் சந்திரமோகன்,மாவட்ட குழு உறுப்பினர்கள் கனகராஜ், பிச்சை, ராமசுப்பு, எட்டயபுரம் சாகுல் ஹமீது மற்றும் தோழர்கள் கண்டன உரை ஆற்றினார்.