தூத்துக்குடியில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை!




தூத்துக்குடி பிரையன்ட் நகர் 10வது தெருவைச் சேர்ந்த  ஒலிமுத்து என்பவரின் மகன் முருகன் (68), இவர் நிலத்தரர் வேலை செய்து வந்துள்ளார், இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இவர் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார், இதனால் மன வேதனையடைந்த முதியவர் முருகன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.