தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு.


தூத்துக்குடி அருகே உள்ள ஆழ்வார்திருநகரி - மாநாடு கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(45), இவர் விவசாயபணி செய்து வந்துள்ளார், இந்நிலையில் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்தில் உள்ள மின் மோட்டரை இயக்கும்போது, எதிர்பாராத விதமாக கோபாலகிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆழ்வார் திருநகரி போலீசார் கோபாலகிருஷ்ணனின் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.