தூத்துக்குடியில் வேலைக்கு சென்ற இடத்தில் 3 பவுன் தங்க நகை திருடிய எலக்ட்ரீசியன் கைது!
தூத்துக்குடி மட்டக்கடை பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் மனைவி சண்முகசுந்தரி (70), இவர் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காளியப்பபிள்ளை தெருவை சேர்ந்த பாலமுருகன்(51), என்ற எலக்ட்ரீசியன் சில நாள்களுக்கு முன்பு வேலைக்கு வந்துள்ளார், வேலைக்கு வந்த இடத்தில் பாலமுருகன் வீட்டின் பீரோவை திறந்து 3 பவுன் தங்கை நகையை திருடி சென்றுள்ளார், இது குறித்து சண்முகசுந்தரி அளித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருடப்பட்ட நகையின் மதிப்பு 1 லட்சத்து 30 ஆயிரம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.