தூத்துக்குடியில் சாலை விபத்தில் கப்பல் படை அலுவலர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு.

கேரள மாநிலம் மலப்புறம் பகுதியை சேர்ந்த விஷ்ணு (31), இவர் தேசிய மாணவர் படையின் கப்பல் படை பிரிவு அலுவலராக பணியாற்றி வந்துள்ளார், இந்நிலையில் தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் வசித்து வந்த இவர், தனது இரு சக்கர வாகனத்தில் சர்வதேச யோகா பயிற்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்தபோது,தூத்துக்குடி மில்லர்புரம் அருகே தமிழ் சாலையில் இருசக்கர வாகனம் வந்தபோது எதிர்பாரா விதமாக தடுமாறி சாலையில் விஷ்ணு கீழே விழுந்துள்ளார் அப்போது பின்னால் அந்த வழியாக வந்த தனியார் பேருந்து அவர் தலை மீது ஏறி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதை தொடர்ந்து தென்பாகம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த விஷ்ணுவுக்கு இரண்டரை ஒரு குழந்தை உள்ளது. யோகா தினத்தில் என்சிசி அலுவலர் உயிரிழந்த சம்பவம் அலுவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.