தூத்துக்குடி அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி.
தூத்துக்குடி - சில்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் மகாராஜன் (56), இவர் வேலை காரணமாக தூத்துக்குடியில் இருந்து சில்லாநத்தம் கிராமத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாமிநத்தம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மகாராஜன் படுகாயம் அடைந்தார், இதனை அடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மகாராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.