தமிழக அரசு மின் கட்டணத்தை திரும்ப பெற கோரி தமிழக கிரில் தயாரிப்பாளர் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் உற்பத்தி நிறுத்த போராட்டம்; தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கிரில் தயாரிப்பாளர்கள் உற்பத்தி நிறுத்தம்.தமிழக அரசு மின் கட்டணத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல மடங்கு உயர்த்தியது. இதன்காரணமாக சிறுகுரு தொழில் செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் இன்று தமிழக கிரில் தயாரிப்பாளர் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசு 430 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தியதாக கூறப்படுகிறது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். மேலும் பரபரப்பு நேர கட்டணம் திரும்ப பெற வேண்டும் 12 கிலோ மின் இணைப்பை 3பி யிலிருந்து 3a ஒன்னுக்கு மாற்றி சிறு குழு தொழில்களை காப்பாற்ற வேண்டும் வெல்டிங் இணைப்புகளுக்கு 3b ஸ்பெஷல் டேரிப்பில் இருந்து மாற்றி 3b அல்லது 3ஏ தயாரிப்புக்கு மாற்ற வேண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முழுவதும் இன்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியில் மாநகரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட கிரில் உற்பத்தியாளர்கள் கடைகளை அடைத்து உற்பத்தி நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.