தூத்துக்குடி மாவட்டத்தில் செப்.28 மற்றும் அக்.2ம் தேதி மதுக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 28.09.2023 (வியாழக்கிழமை) மிலாடிநபி மற்றும் 02.10.2023 (திங்கள் கிழமை) காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக் கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், கிளப்புகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.எனவே விளாத்திகுளம், எட்டயபுரம், சூரன்குடி, குறுக்குசாலை உள்ளிட்ட தூத்துக்குடி  மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், கிளப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 28.09.2023 (வியாழக்கிழமை) மிலாடிநபி, மற்றும் 02.10.2023 (திங்கள் கிழமை) காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.