தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் பஞ்சாயத்தில் கடந்த மூன்று மாதங்களாக நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ளது.  புதுக்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட  வேலாயுதபுரம்  கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் கடந்த மூன்று மாதங்களாக கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. உப்பு தண்ணீர் மற்றும் நல்ல தண்ணீர் ஆகியவை பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கடந்த மூன்று  மாதங்களாக  வழங்கப்படாததால் குடிநீரை ஒரு குடம் பத்து ரூபாய் என விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும் எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தங்கள் கிராமத்திற்கு குடிநீர் வழங்க வேண்டும் எனக்கோரி வேலாயுதபுரம் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.