சீர் மரபினர் நலச்சங்கம் சார்பில் டிஎன்டி என்ற ஒற்றை சான்றிதழ் வழங்க கோரி வருகிற அக்டோபர் மூன்றாம் தேதி சென்னையில் கலைஞர் நினைவிடத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு.
சீர் மரபினர் வகுப்பில் 68 சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் உள்ளனர். இவர்களுக்கு தற்போது தமிழக அரசு டிஎன்டி மற்றும் டிஎன்சி என்ற ரெட்டை சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இதன் காரணமாக கல்வி வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி டிஎன்டி என்ற ஒற்றை சான்றிதழை வழங்க கோரி சீர் மரபினர் நல சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. வருகிற 30-ஆம் தேதிக்குள் இந்த மனுதொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற அக்டோபர் மூன்றாம் தேதி சென்னையில் கலைஞர் நினைவிடத்தில் சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மக்களை ஒன்றுதிரட்டி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.