கோவில்பட்டி அருகே  ரூ. 40 இலட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூட கட்டுமானப் பணிகளை அடிக்கல் நாட்டித்தொடங்கி வைத்த கனிமொழி எம்.பி!


பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 40 இலட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள சமுதாய நலக் கூடத்திற்கு அடிக்கல் நாட்டுதல் விழா தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கொடுக்காம்பாறை ஊராட்சியில் நடைபெற்றது.


இந்தவிழாவில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி பங்கேற்று, ரூ. 40 இலட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள சமுதாய நலக் கூட கட்டுமானப் பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.

இந்தவிழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வா்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.