கோவில்பட்டி அருகே ரூ.9 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நியாயவிலை கடையைத் திறந்து வைத்த கனிமொழி எம்.பி !


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில்  உள்ள நாலாட்டின்புதூர் ஊராட்சி ஆண்டாள் நகரில், பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 9 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடையை திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.


இந்தவிழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வா்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.