விளாத்திகுளம் அருகே தாய் மகள் மர்ம மரணம் - 10 பேரிடம் போலீசார் விசாரணை !
நேற்று மாலை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மேலநம்பிபுரம் கிராமத்தை சேர்ந்த சேர்ந்த பூவன். ஓய்வு பெற்ற ஆசிரியர் இவரது மனைவி சீதாலட்சுமியும் அவரது மகள் ராமஜெயந்தியும் வீட்டுக்குள் ஒரே இடத்தில் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து நெல்லை சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், ASP மீரா, இரண்டு டிஎஸ்பி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் அக்கிராமத்தில் உள்ளவர்களிடம் அனைவரிடமும் 5 மணி நேர விசாரணை மேற்கொண்ட பின்னர்,சீதாலட்சுமி மற்றும் ராமஜெயந்தி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் முதற்கட்ட விசாரணையில் வீட்டுக்குள் சடலமாக கிடந்த சீதாலட்சுமி (75) அவரது மகள் ராம ஜெயந்தி (45) ஆகியோர் அணிந்திருந்த கம்மல்கள்,13 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
மேலநம்பிபுரத்தில் இருந்து கோட்டூர் செல்லும் கிராமச் சாலையில் சீதாலட்சுமியின் மொபைல் போன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் தாய் மகள் மர்ம மரணம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் மேலநம்பிபுரம், தாப்பாத்தி, முத்துலாபுரம், கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகைக்காக இந்த கொலை சம்பவம் நடைபெற்றதா அல்லது இவர்களுக்கு குறிப்பிட சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது, அதனை பறிக்க நினைத்து நடைபெற்றதா? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.