தூத்துக்குடியில் 3,000 மரக்கன்றுகள் நடும் பணிகளை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார். 


தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் சாலை ஓரங்கள் மற்றும் பூங்காக்களில் 3,000 மரக்கன்றுகள் நடும் பணிகளை இன்று தூத்துக்குடி தனசேகர் நகர் பூங்காவில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.