எட்டையபுரத்தில் அமித்ஷாவைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்!



கடந்த டிசம்பர் 17-ம் தேதி மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்ட மாமேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக அமித்ஷாவின் பேச்சைக் கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவரின் பேச்சையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதே போல தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பேருந்து நிலையம் முன்பு கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் தலைமையில் திமுகவினர் ஏராளமானோர் அம்பேத்கரின் படத்தை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.