திருச்செந்தூரில் காணாமல் போன 11 செல் போன் உரியவர்களிடம் ஒப்படைப்பு:காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய அழைக்கப்பட்ட பகுதிகள் செல் போன் காணாமல் போனதாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், புகார் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார், காணாமல் போன 11 செல்போன்களை கண்டுபிடித்து, திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமூர்த்தி செல்போனின் உரிமையாளர்களை நேரில் அழைத்து ஒப்படைத்தனர். காணாமல் போன் செல்போன்களை கண்டுபிடித்து தந்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.