வருகின்ற நவ,14-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 14-11-2024 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அனைத்து தொடர்புடைய துறைகளுடன் ஆய்வு கூட்டம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் துணை முதலமைச்சர் வருகைக்கு தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்யுமாறும், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.