தூத்துக்குடியில் அழுகிய நிலையில் கடலில் மிதந்த மீனவரின் உடல்?


தூத்துக்குடி மட்டக்கடை பகுதி சேர்ந்தவர் மீனவர் வில்வராயர் (55), இவர் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி கடலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது, இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகம் போட் யார்டு  கடல் பகுதியில் மீனவர் வில்வராயர் உடல் அழுகிய நிலையில்  மிதந்துள்ளது, இதனை அடுத்து வில்வராயரின் உடலை மீட்ட மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.