தூத்துக்குடி அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி- கடையனோடை பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் (28), இவர் ஏரல் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கி இப்ராஹிம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து தகவல் அறிந்து இப்ராஹிம் உடலை மீட்ட ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.