திருச்செந்தூர் அருகே ஒருதலை காதல் தோல்வியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் திரவியம் என்பவரின் மகன் மணிமாறன் (25), இவர் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார், இவர் அப்பகுதியில் உள்ள ஒரு இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒரு இளைஞருடன் திருமணம் ஆன நிலையில், இதனால் மனவிரக்தியில் இருந்த மணிமாறன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.