தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் கல்குவாரியில் இருந்து உரிய அனுமதியின்றி கருங்கற்களை ஏற்றி வந்ததது தெரியவந்தது, இதனை அடுத்து கருங்கடல் கிராம நிர்வாக அலுவலர் துரைச்சாமி(25) கொடுத்த புகாரின் பேரில், பனைகுளம் பகுதியில் வந்து கொண்டிருந்த லாரியை சாத்தான்குளம் போலீசார் பறிமுதல் செய்து லாரி ஓட்டுநர் குரும்பூர் பகுதியை சேர்ந்த மாயாண்டி மகன் பிரபு(22) என்பவரை கைது செய்து லாரியில் இருந்த சுமார் 2 1/2 யூனிட் குண்டுக்கல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும் இது குறித்து லாரி உரிமையாளர் தெற்கு மாறாந்தலை சேர்ந்த ரா. ரகுராமன் என்பவரை தேடி வருகின்றார்.