தூத்துக்குடி DR நாயுடு பகுதியை சேர்ந்த பிரபாகரன் மகன் பிரவீன் (43), இவர்அப்பகுதியில் தங்க நகைகளுக்கு பாலிஷ் போடும்  கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தை சேர்ந்த பக்கீர் உதயன் (26) என்பவர் வேலைக்கு சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 18-06-2024 செவ்வாய்க்கிழமை இரவு கடையில் வைத்திருந்த 200 கிராம் தங்க நகைகளை திருடி தப்பி ஓடியுள்ளார், அதன் மதிப்பு ரூபாய் 6 லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து பிரவீன் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.